ஐக்கிய அரபுக் குடியரசு (UAE)நாட்டினருக்கு கட்டாய ராணுவ சேவை அளிக்க ஷேக் முகமது பின் ரஷீத் அல்-மக்தூம் திட்டம்!
துபாய், ஜன. 20-
ஐக்கிய அரபுக் குடியரசின் பிரதமரான ஷேக் முகமது பின் ரஷீத் அல்-மக்தூம் 18 வயதிலிருந்து 30 வயது வரையிலுமான தங்கள் நாட்டு மக்களுக்கு கட்டாய ராணுவ சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளுக்கு ஒன்பது மாதங்களும், அதற்கும் குறைவான கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு இரண்டு வருடமும் ஆயுதப் படையில் பயிற்சி வழங்கப்படும். ஓய்வு பெற்ற ஆயுதப்படையின் வீரர்களும், தேசிய சேவைத் திட்டத்தின் வீரர்களும் நாட்டின் ரிசர்வ் படையில் பங்கு பெறுவர். தேசத்தைக் காப்பதுவும், நாட்டின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாப்பதுவும் குடிமக்களின் புனிதமான தேசிய கடமையாகும். இந்த புதிய சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று அவர் தனது இணையதளத் தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
துபாயின் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபுக் குடியரசின் துணைப் பிரதமராகவும் செயல்பட்டுவரும் அல்-மக்தூம் தேசிய பாதுகாப்பு மற்றும் ரிசர்வ் வளங்கள் குறித்த ஒரு மசோதாவை சமர்ப்பிக்கும்படி தனது அமைச்சரவையைக் கேட்டுக் கொண்டுள்ளார். மொத்தம் 8.8 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ள அரபு நாட்டில் 20 சதவிகிதத்தினரே அந்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் ஆவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Category: துபாய்
0 comments