என்ஆர்ஐ மூலம் நடக்கும் தங்க கடத்தலை தடுக்க புதிய கண்காணிப்பு திட்டம்!
புதுடெல்லி: வெளிநாடுகளில் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வசிப்பவர்கள், சுங்க வரி செலுத்தி ஒரு கிலோ தங்கத்தை கொண்டு வர அனுமதி உள்ளது. கடந்த 2013-2014ம் ஆண்டில் மட்டும் 3 ஆயிரம் கிலோ தங்கம் வெளிநாடுகளில் இருந்து சுங்க வரி இந்தியாவிற்கு செலுத்தி கொண்டு வரப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆணாக இருந்தால் ஸி50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தையும், பெண்ணாக இருந்தால் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான தங்கத்தையும் சுங்கவரி செலுத்தாமல் கொண்டு வரலாம். இவர்களிடம் இலவச விமான டிக்கெட், கமிஷன் ஆசை காட்டி கடத்தல்காரர்கள் தங்கம் கடத்திவருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எவ்வளவு தங்கம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை சுங்கத்துறை, வருமான வரி துறையுடன் இணைந்து கண்காணிக்க அரசு முடிவு செய்யப்பட்டது.
Category: மாநில செய்தி
0 comments