துபாயில் இருந்து சென்னைக்கு துப்பாக்கிகள் கடத்தி வந்தவர் கைது!
சென்னை, ஜன. 23
துபாயில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னைக்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற ஒரு வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன. அப்போது, அவரது சூட்கேசுக்குள் 9 கைத்துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியதுடன், அவற்றைக் கடத்தி வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவையைச் சேர்ந்த குரியன் (27) என்பது தெரியவந்தது. நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Category: மாநில செய்தி
0 comments