தேர்தல் தேதி அறிவிக்கும் வரை வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம்: தேர்தல் அதிகாரி தகவல்!
சென்னை, ஜன. 22–
வாக்காளர் இறுதி பட்டியல் கடந்த 10–ந்தேதி வெளியிடப்பட்டது. 2014 ஜனவரி 1–ந்தேதியை மையமாக வைத்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் சேர்த்து கொள்ளப்பட்டனர்.
புதிய வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை பார்த்து அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்தம் செய்ய மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர் சேர்க்கப்படாமல் செய்யப்பட்டு இருந்தாலும் முகவரி மாற்றம், பிழைகள் இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்துகொள்ள அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி கமிஷனருமான விக்ரம்கபூர் கூறியதாவது:–
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் வரை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர்கள் பெயரை சேர்க்கலாம், முகவரி மாற்றம், பிழைகள் இருப்பின் அதனை திருத்தி கொள்ளலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் 1913 எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மாநகராட்சியில் உதவி மையம் ஒன்று தொடங்கப்படும். அதில் தேர்தல் தொடர்பான தகவல்களை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Category: மாநில செய்தி
0 comments