அமெரிக்க ராணுவத்தில் முஸ்லிம் வீரர்கள் தாடி வைக்க அனுமதி!
அமெரிக்க ராணுவத்தில் தாடி வைக்க அனுமதி : முஸ்லிம் வீரர்களின் தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி! 3,700 முஸ்லிம் வீரர்களுடன் 1,500 சீக்கியர்களும் பயனடைவார்கள் !! அமெரிக்க ராணுவத்தில், முஸ்லிம்கள் தங்கள் மத வழக்கப்படி தாடி வைக்கவும், பணியிடங்களில் தொழுகை நடத்தவும் இருந்த தடைகளை எதிர்த்து தொடர்ந்து போராடியதால், தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. முஸ்லிம்களின் இப்போராட்டத்தின் மூலம் சீக்கியர்களும் இச்சலுகையைப் பெற்றனர். அமெரிக்க ராணுவத்தில் 3700 முஸ்லிம்களும் 1500 சீக்கியர்களும் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: உலக செய்தி
0 comments