வேலை வேண்டுமா?
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம்
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நூலகர், தகவல் அறிவியலாளர், சிஸ்டம் அனலிஸ்ட், தனிச் செயலர், செக்ஷன் ஆபிசர், செக்யூரிட்டி ஆபிசர், உதவியாளர், தனி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், தொழில்முறை உதவியாளர், செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர், எழுத்தர் உள்ளிட்ட கல்வி சாராத 53 காலியிடங்கள் உள்ளன. இதில் பிரிவுகளுக்கு ஏற்ப இடஒதுக்கீடு உண்டு. வேலையைப் பொறுத்து இளங்கலைப் பட்டம் முதல் முதுகலைப் பட்டம் வரை, அனுபவம், தொழில்நுட்பத் திறன்கள் போன்றவையும் அவசியம். ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி வயது வரம்பு உண்டு. விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.1.14. கூடுதல் விவரங்களுக்கு: www.cutn.ac.in
எய்ம்ஸ் மருத்துவமனை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குரூப் பி, சி பிரிவில் நீரிழிவு நோய் நிபுணர், கிடங்கு அதிகாரி, தொழில்நுட்பர், இளநிலைப் பொறியாளர், உளவியல் நிபுணர் உள்ளிட்ட 17 பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. மொத்தக் காலியிடங்கள் 245. சிலவற்றுக்கு இடஒதுக்கீடு உண்டு. வேலைக்கு ஏற்பக் கல்வித் தகுதிகள் மாறுபடும். சிலவற்றுக்கு அனுபவமும் தேவை. வயது வரம்பும் வேலைக்கேற்ப மாறும். விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.1.14. கூடுதல் விவரங்களுக்கு: www.aiimaexams.org
இந்திய ராணுவம்
இந்திய ராணுவத்தில் என்.சி.சி. சான்றிதழ் உள்ளவர்களுக்கான ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு 50, பெண்களுக்கு 4 காலியிடங்கள் உள்ளன. வயது வரம்பு 19 முதல் 25க்குள். ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் உடல் தகுதியும் மருத்துவத் தகுதியும் அவசியம். நேர்முகத் தேர்வு, உடல் தேர்வு, மருத்துவத் தேர்வு போன்றவை அடுத்தடுத்த கட்டமாக நடத்தப்படும். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.1.14 கூடுதல் விவரங்களுக்கு:
www.joinindianarmy.nic.in
Category: வேலைவாய்ப்பு
0 comments