துபாய் அல்லது சார்ஜாவில் இந்தியா–பாகிஸ்தான் போட்டி: கிரிக்கெட் வாரியம் ஆலோசனை!
சென்னை, ஜன.25–
இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே கடைசியாக 2012 டிசம்பர், 2013 ஜனவரி மாதம் போட்டி நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்தியா– பாகிஸ்தான் அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை பொதுவான இடத்தில் நடத்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் எந்த அணியும் விளையாட வில்லை. பொதுவான இடமான ஐக்கிய அரபு எமிரேட்டில்தான் ஆடி வருகிறது.
இதேபோல இந்திய அணியும், பாகிஸ்தானுடன் பொதுவான இடத்தில் விளையாட முடிவு செய்துள்ளது.
துபாய் அல்லது சார்ஜாவில் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் சென்னையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்பட வில்லை.
2015 வரை இந்திய அணி எதிர்கால சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தானுடனான போட்டி இல்லை. ஆனால் குறுகிய கால போட்டித் தொடராக பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றிதான் கிரிக்கெட் வாரியம் ஆலோசிக்கிறது
Category: துபாய், மாநில செய்தி
0 comments