.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

‘பான் கார்டு’ பெற புதிய நடைமுறை! ஐ டி -துறை அறிவிப்பு!

Unknown | 2:20 PM | 0 comments

‘பான் கார்டு’ வழங்கக்கோரி விண்ணப்பிப்பதற்கான புதிய நடைமுறைகளை வருமான வரித்துறையின் கீழ் செயல்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.வரி ஏய்ப்பு செய்வதற்காகவும், பினாமி சொத்துக்களை வாங்கவும், விற்கவும் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டு, எதிர்காலத்தில் இதைத் தவிர்க்கும் விதத்தில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
jan 28 - pan card
இதன்படி, பான் கார்டு கேட்டு அதற்கான மையங்களில் விண்ணப்பிக்கிறவர்கள், விண்ணப்பத்துடன் அடையாள ஆவணம், முகவரி, பிறந்த தேதி ஆவணங்களை இணைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களால் சான்றளிக்கப்பட்ட நகல் ஆவணங்களுடன், அசல் ஆவணங்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒப்பிட்டு சரி பார்த்து விட்டு அசல் ஆவணங்கள் உடன் திருப்பி வழங்கப்படும்.புதிதாக பான் கார்டு வழங்கக்கோரி விண்ணப்பிப்பவர்கள் அதற்காக ரூ.105 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் அனைத்து வரிகளும் அடக்கம்.
அது சரி, யாரெல்லாம் பான் கார்டு வாங்க வேண்டும்? ஆண்டுக்கு சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பான் கார்டு அவசியம். மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தவோ எடுக்கவோ பான் கார்டு எண் கொடுக்க வேண்டும். பான் கார்டு இல்லாதவர்கள், தனக்கு வருமான வரி கட்டும் அளவுக்கு வருமானம் இல்லை அல்லது வரியை நானே கட்டிவிடுவேன் என்று உறுதி அளிக்க வேண்டும். இதற்கு சில படிவங்கள் வங்கிகளில் இருக்கும். அதைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் வாகனம், நிலம், வீடு போன்ற மதிப்புள்ள பொருட்களை வாங்கும்போதும் பான் கார்டு எண் அவசியம். தவிர, அரசு வேறு எதற்கெல்லாம் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வலியுறுத்துகிறதோ அற்கெல்லாம் கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒருவர் பான் கார்டு வாங்கியதாலேயே அவர் வருமான வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருமானம் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் ஒரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் உங்கள் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1