லப்பைகுடிக்காடு அருகே வீடு புகுந்து நகை-பணம் திருட்டு மர்ம மனிதனுக்கு போலீஸ் வலைவீச்சு!
வெளிநாட்டில் வேலை
பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு அருகே உள்ள பென்னகோணம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 24). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் ரோஜா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது ரோஜா கர்ப்பிணியாக உள் ளார்.
வளைகாப்பு
ரோஜாவின் வளைகாப் பிற்காக கோபி வெளிநாட்டில் இருந்து லீவு போட்டு விட்டு வந்துள்ளார். கணவன்- மனைவி இருவரும் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.வீட்டின் கதவை திறந்து மர்ம மனிதன் உள்ளே வந்து பீரோவில் இருந்த 14 பவுன் நகை மற்றும் ரூ.34 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.
இது பற்றி மங்களமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம மனிதனை தேடி வருகிறார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா, துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் ஆகியோர் பார்வை யிட்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாயும் வர வழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப் பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments