பெரம்பலூரில் வங்கி ஏ.டி.எம். அட்டைகளை திருடி ரூ.56 ஆயிரம் சுருட்டிய ஓட்டல் தொழிலாளி கைது!
பெரம்பலூரில் ஏ.டி.எம். அட்டைகளை திருடி ரூ.56 ஆயிரம் பணம் சுருட்டிய ஓட்டல் தொழி லாளியை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டல் தொழிலாளி
கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் ஆஞ்சநேயர் கோவில்தெருவைசேர்ந்தவர் வெங்கடேசன் (வயது30).
இவர் டிப்ளமோ கேட்டரிங் முடித்து விட்டு காதல் திரு மணம் செய்துள்ளார். தற்போது பெரம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் வசித்துவரும் வெங்கடேசன் பெரம்பலூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் வேலைபார்த்துவந்தார்.
ரூ.50 ஆயிரம் சுருட்டல்
இந்த நிலையில் துறையூர்¢ சாலையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் வெங்க டேசன் பணம் எடுக்கச் சென்றபோது, அரணாரையை சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது ஏ.டி.எம். அட்டையை வெங்கடேசனிடம் கொடுத்து ரூ.2ஆயிரம் பணம் எடுத்து தருமாறு கூறினார்.
அவருக்கு ரூ.2 ஆயிரம் பணத்தை எடுத்து தந்துவிட்டு, வெங்கடேசன் அவரது அட்டையை தான் வைத்துக் கொண்டு, தனது ஏ.டி.எம். அட்டையை அவரிடம் கொடுத்து விட்டார். பின்பு பெரியசாமியின் ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் ரொக்கம் எடுத் துள்ளார்.
மீண்டும் ரூ.6 ஆயிரம்
இதேபோல ஊர்க்காவல் படையில் வேலைபார்க்கும் தம்பை கிராமத்தை சேர்ந்த வடிவேல் ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்கச்சென்றார். அப் போது அங்கு சென்ற வெங்க டேசன், தான் ஏற்கனவே வைத்திருந்த பெரிய சாமியின் ஏ.டி.எம். அட்டையை ஏ.டி.எம். மையத்தில் கீழே போட்டார்.
வடிவேலுவின் கவனத்தை திசை திருப்பி ஏ.டி.எம்.எந்திரத்தில் சொருகிஇருந்த அவரது ஏ.டி.எம். அட்டையை வெங்கடேசன் எடுத்துக் கொண்டு நைசாக சென்று விட்டார். பின்பு வடிவேலுவின் அட்டையில் எழுதப்பட்டி ருந்த பின் எண்ணை பயன் படுத்தி ரூ.6ஆயிரம் ரொக்கம் எடுத்துள்ளார்.
தில்லு முல்லு தெரிந்தது
அதில் இருந்து வெங்கடேசன் பயன்படுத்திய 3 ஏ.டி.எம். அட்டைகளும் ஒரே வங்கியை சேர்ந்தது என்பதால், முதலில் பெரியசாமிக்கும், வடிவேலு விற்கும் சந்தேகம் வரவில்லை. ஓரிரு தினங்களில் பெரிய சாமியும், வடிவேலுவும் வங்கி இருப்பை சரிபார்த்தபோது பெரியசாமி கணக்கில் ரூ.50 ஆயிரமும், வடிவேல் கணக் கில் ரூ.6ஆயிரமும் எடுக்கப் பட்டிருந்தது.
இதற்கிடையில் வெங்க டேசன் தனது ஏ.டி.எம். அட்டை காணாமல் போய் விட்டது என்று வங்கி நிர் வாகத்திடம் புகார் செய்த போது வெங்கடேசன் செய்த தில்லுமுல்லு தெரிய வந்தது.
கைது
இந்த சம்பவம் குறித்த புகார் களின் பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தார். அவரிடம் இருந்து ஏறத்தாழ ரூ.25ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான வெங்கடேசன் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
Category: மாவட்ட செய்தி
0 comments