அபுதாபி: அசுர வேகத்தில் சென்ற 5 கார்கள் மோதி தீப்பற்றிய விபத்தில் டிரைவர் பலி!
அபுதாபி, ஜன. 22-
ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபி நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் சென்ற 5 கார்கள் ஒன்றோடொன்று மோதி தீப்பிடித்த விபத்தில் ஒரு காரின் டிரைவர் பரிதாபமாக பலியாகினார்.
அபுதாபி- துபாய் நெடுஞ்சாலை வழியாக நேற்று ஏராளமான வாகனங்கள் வேகமாக சென்றுக் கொண்டிருந்தன. அபுதாபியில் உள்ள அல்ரஹா கடற்கரை அருகே இரண்டு கார்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறிய ஒரு கார், முன்னால் சென்ற காரின் மீது படுவேகமாக மோதியது.
இதனால், முன்னால் சென்ற கார் கரணம் அடித்து, சாலையில் உருண்டபடியே பக்கவாட்டில் சென்ற வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியது. சாலையில் தேய்த்துக் கொண்டே சென்று மோதிய வேகத்தில் அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இந்த காட்சியை கண்டு திடுக்கிட்டனர்.
இந்த கோர விபத்தில் தீப்பற்றிய காரின் டிரைவர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினார். அபுதாபியை சேர்ந்த ஒரு பெண்ணும், ஆப்பிரிக்காவை சேர்ந்த மற்றொரு பெண்ணும் படுகாயங்களுடன் ஷேக் கலிஃபா மற்றும் மஃப்ரக் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுவாகவே, அரபு நாடுகளின் நெடுஞ்சாலைகளில் வேக கட்டுப்பாட்டை மீறிய வகையில் வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்வதால் இதைப்போன்ற பல கோர விபத்துகள் நடப்பதும், உயிர்கள் பலியாவதும் தொடர்கதை ஆகி விட்டது.
கடந்த 16-ம் தேதி அதிகாலை பனிமூட்டமாக காணப்பட்ட அபுதாபி- அல் ஐன் நெடுஞ்சாலையில் 57 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 14 பேர் படுகாயமடைந்தது நினைவிருக்கலாம்.

Category: அபுதாபி
0 comments