மக்களவைத் தேர்தல் பெரம்பலூர் மாவட்டத்தில் 12 தாசில்தார்கள் திடீர் மாற்றம்!
பெரம்பலூர், ஜன. 22:
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 12 தாசில்தார்கள் திடீரென பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் தரேஸ் அஹமது பிறப்பித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், சப்& கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் தாசில்தார் நிலையில் பணியாற்றி வந்த 12 தாசில்தார்கள் நிர்வாக நலன் கருதி திடீரென பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் தரேஸ் அஹமது பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ஆலத்தூர் தாசில்தார் நாராயணன் பெரம்பலூர் சப்&கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், சப்&கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகாராஜ் ஆலத்தூர் தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் தாசில்தார் ரெங்கராஜு பெரம்பலூர் புறவழிச் சாலை (நிலம் எடுப்பு) தனி தாசில்தாராகவும், பெரம்பலூர் புறவழிச் சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தார் செல்வராஜ் வேப்பந்தட்டை தாலுகா சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேப்பந்தட்டை தாலுகா சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார் முத்தையன் பெரம்பலூர் தாசில்தாராகவும், குன்னம் தாசில்தார் செல்வம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர்அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஷாஜகான் கலெக்டர் அலுவலக குற்றவியல் பிரிவு அலுவலக மேலாளராகவும், ஏற்கனவே குற்றவியல் பிரிவு அலுவலக மேலாளராகப் பணியாற்றி வந்த மகாலெட்சுமி பெரம்பலூர் அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல், பெரம்பலூரில் அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகப் பணியாற்றி வந்த மனோன்மணி, பெரம்பலூர் ஆதிதிராவிடர் நலத் துறை தனி தாசில்தாராகவும், அங்கு ஏற்கனவே ஆதிதிராவிடர் நலத் துறை தனி தாசில்தாராகப் பணியாற்றி வந்த பூங்கோதை குன்னம் தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேப்பந்தட்டை தாசில்தார் திருஞானம் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், ஏற்கனவே இப்பதவியில் இருந்த ஏழுமலை வேப்பந்தட்டை தாசில்தாராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவுகளை ஏற்று 12 தாசில்தார்களும் விரைந்து பணியேற்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments