பெரம்பலூரில் இன்று 3 வது புத்தக திருவிழா தொடக்கம்!!
3 வது புத்தகத் திருவிழா பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் 31.01.2014 வெள்ளிக்கிழமை முதல் 09.02.2014 ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். மாலை நேரங்களில் சிறப்பு பேச்சாளர்கள் வருகை தர உள்ளனர். நிகழ்வினை ரசித்திட குடும்பத்துடன் வாருங்கள்...

நான் கடந்த 9 வருடங்களாக சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்வது வழக்கம்..அப்பொழுதெல்லாம் நம் ஊரில் புத்தக கண்காட்சி நடக்குமா என்று எண்ணியிருக்கின்றேன்....ஆனா ல் மிகவும் சிறிய ஒரு மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய ஒரு மாவட்டத்தில் இன்று புத்தக திருவிழா நடைபெறுகிறதென்றால் நிச்சயம் அந்த பெருமைகள் அனைத்தும் நமது மாவட்ட ஆட்சித்தலைவரையே சாரும்.
சென்ற 2 ஆண்டுகளாக புத்தக திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் தினமும் குடும்பத்துடன் மாலையில் செல்வேன். பேச்சாளர்களின் உரை வீச்சினை கேட்டு விட்டு வருவோம். கடைசி நாட்களில் புத்தகங்கள் வாங்குவோம்...இனிமையான நாட்கள் அவை அனைத்துமே...
இந்த ஆண்டு எனக்கு புதிய அனுபவம்..புத்தக திருவிழாவினை பொறுப்பேற்று நடத்தும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றத்தின்
தலைவராக நானும் செயலராக நண்பர் அரவிந்தன் அவர்களும் இணைந்து செயல்படும் வாய்ப்பு..சரியாக சொல்ல வேண்டுமென்றால் அரவிந்த் தான் தலைவராக வர வேண்டும்..அவர் செயலராகவே நீடிக்க விருப்பம் தெரிவித்ததால் எனக்கு ஒரு வாய்ப்பு. சகோதரர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன இயக்குனர் மணி அவர்கள் தான் 2 ஆண்டுகளாக தலைவராக செயல்பட்டு வந்தார். அவரது பணிசுமை காரணமாக நாங்கள் ஏற்று கொண்டோம்...

புத்தக திருவிழாவிற்காக மாவட்ட ஆட்சியர் இது வரை 20 கூட்டங்கள் நடத்தியிருப்பார். அந்த அளவிற்கு புத்தகங்களை அவர் நேசிக்கின்றார். தான் நேசிப்பதோடு மட்டுமல்லாமல் பெரம்பலூர் மக்கள் அனைவரும் வாசிக்க வேண்டும் என்று மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு இந்த விழாவினை அவர் ஏற்பாடு செய்துள்ளார்...உண்மையில் எங்களுடைய பணியெல்லாம் ஒன்றுமே இல்லை... மாவட்ட ஆட்சியரும் அவருடைய அலுவலக பணியாளர்கள் திரு.மணிவாசகம் , வட்டாட்சியர் திரு.சீனிவாசன் மற்றும் கோட்டாட்சியர் திரு.இரவிக்குமார் ( தற்போது சேலத்தில் பணி ) அவர்களும் முழு நேர பணியாக இவ்விழாவினை ஏற்று நடத்துகின்றனர்...
பல பேருடைய கடும் உழைப்பில், பெரும் பொருட்செலவில் நம் ஊரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவினை வெற்றி பெற செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கின்றது... உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் , உறவினர்கள் அனைவரிடமும் சொல்லுங்கள்....வாருங்கள் வாசிப்பை சுவாசிப்போம்.....

நான் கடந்த 9 வருடங்களாக சென்னை புத்தக கண்காட்சிக்கு செல்வது வழக்கம்..அப்பொழுதெல்லாம் நம் ஊரில் புத்தக கண்காட்சி நடக்குமா என்று எண்ணியிருக்கின்றேன்....ஆனா
சென்ற 2 ஆண்டுகளாக புத்தக திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் தினமும் குடும்பத்துடன் மாலையில் செல்வேன். பேச்சாளர்களின் உரை வீச்சினை கேட்டு விட்டு வருவோம். கடைசி நாட்களில் புத்தகங்கள் வாங்குவோம்...இனிமையான நாட்கள் அவை அனைத்துமே...
இந்த ஆண்டு எனக்கு புதிய அனுபவம்..புத்தக திருவிழாவினை பொறுப்பேற்று நடத்தும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றத்தின்
தலைவராக நானும் செயலராக நண்பர் அரவிந்தன் அவர்களும் இணைந்து செயல்படும் வாய்ப்பு..சரியாக சொல்ல வேண்டுமென்றால் அரவிந்த் தான் தலைவராக வர வேண்டும்..அவர் செயலராகவே நீடிக்க விருப்பம் தெரிவித்ததால் எனக்கு ஒரு வாய்ப்பு. சகோதரர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவன இயக்குனர் மணி அவர்கள் தான் 2 ஆண்டுகளாக தலைவராக செயல்பட்டு வந்தார். அவரது பணிசுமை காரணமாக நாங்கள் ஏற்று கொண்டோம்...

புத்தக திருவிழாவிற்காக மாவட்ட ஆட்சியர் இது வரை 20 கூட்டங்கள் நடத்தியிருப்பார். அந்த அளவிற்கு புத்தகங்களை அவர் நேசிக்கின்றார். தான் நேசிப்பதோடு மட்டுமல்லாமல் பெரம்பலூர் மக்கள் அனைவரும் வாசிக்க வேண்டும் என்று மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு இந்த விழாவினை அவர் ஏற்பாடு செய்துள்ளார்...உண்மையில் எங்களுடைய பணியெல்லாம் ஒன்றுமே இல்லை... மாவட்ட ஆட்சியரும் அவருடைய அலுவலக பணியாளர்கள் திரு.மணிவாசகம் , வட்டாட்சியர் திரு.சீனிவாசன் மற்றும் கோட்டாட்சியர் திரு.இரவிக்குமார் ( தற்போது சேலத்தில் பணி ) அவர்களும் முழு நேர பணியாக இவ்விழாவினை ஏற்று நடத்துகின்றனர்...
பல பேருடைய கடும் உழைப்பில், பெரும் பொருட்செலவில் நம் ஊரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவினை வெற்றி பெற செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கின்றது... உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் , உறவினர்கள் அனைவரிடமும் சொல்லுங்கள்....வாருங்கள் வாசிப்பை சுவாசிப்போம்.....
Category: மாவட்ட செய்தி
0 comments