பெரம்பலூர் அருகே போலீசுக்கு தெரியாமல் கல்லூரி மாணவரின் உடல் எரிப்பு 13 பேர் மீது வழக்கு!
பெரம்பலூர், ஜன.14-
பெரம்பலூர் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவரின் உடல் போலீசுக்கு தெரிவிக்காமல்எரித்ததாக தந்தை-மகன் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தற்கொலை
பெரம்பலூரை அடுத்த லாடபுரம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகன் பொன்னுசாமி (வயது24). குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில் எம்.எஸ்.சி. இறுதிஆண்டு படித்துவந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பொன்னுசாமி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.ஆனால் போலீசுக்கு தக வல் தெரிவிக்காமல் பொன்னுசாமியின் பிரேதத்தை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துசென்று எரித்துவிட்டனர்.
13பேர் மீது வழக்கு
இதுகுறித்து லாடபுரம் கிராம நிர்வாக அலுவலர் நல்லுசாமி பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ்இன்ஸ்பெக்டர் சர்புதீன் மேற்பார்வையில் சப்இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, கல்லூரி மாணவர் பொன்னுசாமி தற்கொலை செய்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் எரித்ததாக பொன்னுசாமியின் தந்தை சாமுவேல், தம்பி செல்வகுமார் ஆகியோர் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments