வேப்பந்தட்டை அருகே 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது!
![]() |
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சிறுவயலூர் பகுதியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்புடன் தீயணைப்பு வீரர்கள். |
பெரம்பலூர், ஜன.23:
பெரம்பலூர் அருகே நேற்றுமுன்தினம் இரவு 12 அடி நீள மலைப்பாம்பை தீய ணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த சிறுவயலூரில் ஒரு பாலத்தின் அருகில் நேற்றுமுன்தினம் இரவு மலைப் பாம்பு ஒன்று கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், முதன்மை தீயணைப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்ப ராஜ், காசிநாதன், சரவணன், பழனிச்சாமி உள்ளிட்ட தீய ணைப்பு வீரர்கள் சென்று பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு 12 அடி நீளம், 75 கிலோ எடை இருந்தது.
பின்னர் பாம்பை வனத்துறையினரி டம் ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments