108, 104 ல் பணிபுரிய ஆசையா? உடனே கிளம்பி சென்னைக்கு வாங்க!...
அவசர கால, '108' ஆம்புலன்ஸ் திட்டம், உடனடி, '104' மருத்துவ சேவைத் திட்டத்திலும், டாக்டர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான நேர்முகத் தேர்வு, நாளையும், 28ம் தேதிகளில், சென்னையில் நடக்கிறது.
தமிழக சுகாதார அமைப்புகள் திட்டத்தின் கீழ், 'ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ.,'நிறுவனம், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவை, உடனடி, '104' மருத்துவ சேவைத் திட்டம், சென்னை குரோம்பேட்டை, பாடியநல்லுாரில், அவசர கால மருத்துவ மையங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இதில் சேர்ந்து பணியாற்ற, எம்.பி.பி.எஸ்., முடித்த புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் தேவைப்படுவதாக, ஜி.வி.கே., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான நேர்முகத் தேர்வு, நாளையும்(27-01-2014)28ம் தேதியிலும், சென்னை, கஸ்துாரிபாய் மருத்துவமனையில் உள்ள, '108' ஆம்புலன்ஸ் சேவை மைய தலைமையகத்தில் நடக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, 044 2888 8060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Category: வேலைவாய்ப்பு
0 comments