.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்: பதிவுமூப்பு பரிந்துரையை சரிபார்க்க அழைப்பு!

Unknown | 10:48 PM | 0 comments

தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலின்படி பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், டி. 16-ம் தேதிக்குள் சரிபார்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு, மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியலின் படி பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று, தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழக பொது மேலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சிவில் என்ஜினியரிங் பட்டயப்படிப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1.11.2013-ம் தேதி எஸ்.சி.ஏ, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும், பி.சி, எம்.பி.சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கலப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எம்.பி.சி இருபாலரும் 2.9.2013 வரையிலும், பி.சி. பிரிவில் இருபாலரும் 12.2.2013 வரையிலும், ஓ.சி. பிரிவில் இருபாலரும் 10.2.2009 வரையிலும், எஸ்.டி பிரிவில் இருபாலரும் நாளது தேதி வரையில் பரிந்துரைக்கப்பட உள்ளனர். முன்னுரிமையற்ற பிரிவில், எம்.பி.சி பெண்கள் 10.9.2001 வரையிலும், ஆண்கள் 5.1.2001 வரையிலும், பி.சி.எம் பெண்கள் 28.7.2003 வரையிலும், ஆண்கள் 20.6.2000 வரையிலும், இதர அனைத்துப் பிரிவினரைச் சார்ந்த இருபாலரும் 20.6.2000 வரையிலும் தோராய பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட உள்ளனர். மேற்கண்ட தோராய பதிவு மூப்பிற்குள்பட்ட, பெரம்பலுர் மாவட்ட பதிவுதாரர்களின் பெயர் விவரங்கள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளன. எனவே, பெரம்பலூர் மாவட்ட பதிவுதாரர்கள் அனைவரும் தங்களது பெயர்கள் விடுபாடின்றி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை, டிச. 16-ம் தேதிக்குள் சரிபார்த்து உறுதி செய்துகொள்ளலாம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1