.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வேப்பந்தட்டையில் அரசு வேளாண்மை பொறியியல் கல்லூரி முதல்-அமைச்சருக்கு வணிகர் நல சங்கம் வேண்டுகோள்!

Unknown | 8:30 PM | 0 comments

வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் அரசு வேளாண்மை பொறியியல் கல்லூரி அமைக்க உத்தரவிட வேண்டும் என வணிகர் நல சங்கத்தினர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முதல்-அமைச்சருக்கு பாராட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் வணிகர் நல சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வணிகர் சங்க கவுரவத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தலைவர் ஞானவேல், துணைத் தலைவர் குழந்தைவேல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மகேந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேறப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:-
தீயணைப்பு நிலையம்
வேப்பந்தட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை வேப்பந்தட்டை யில் அமைக்க ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி யையும் பாராட்டுதலையும் தெரிவித்து கொள்வது.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியமைக் காக முதல்-அமைச்சரிடம் விருது பெற்ற பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமதுவிற்கு பாராட்டு தெரிவிப்பது, தாலுகா தலைமையிடமான வேப்பந்தட்டையில் தீய ணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது,
வேளாண்மை கல்லூரி
வேப்பந்தட்டையில் கோவை வேளாண் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கி வரும் பருத்தி ஆராய்ச்சி மைய வளாகத்தில் அரசு வேளாண்மை பொறியியல் கல்லூரியை அமைத்து உத்தரவிட வேண்டும் என முதல்-அமைச்சர் ஜெய லலிதாவை கேட்டுக் கொள் வது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1