.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கிராம பஞ்சாயத்துகளில் இனி வீட்டுமனை அனுமதிக்கு புது கட்டுப்பாடு!

Unknown | 8:46 PM | 0 comments

நெல்லை : கிராம பஞ்சாயத்துகளில் மனைப்பிரிவுகளுக்கு கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அனுமதி வழங்க இயலாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் பல்வேறு இடங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் மொத்தமாக வளைக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு விற்பனை செய்யப்படும் ஒரு சில வீட்டு மனைகள் நகர் ஊரமைப்புத் துறையின் முறையான அனுமதியின்றி விற்பனை செய்யப்படுகிறது. அனுமதியில்லாத வீட்டு மனைகளை வாங்கிய பொதுமக்கள் அவற்றில் வீடு கட்ட முடியாமல் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியும் பொதுமக்கள் பலர் ஏமாந்து விடுகின்றனர். இந்நிலையில், மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக நெல்லை கலெக்டர் கருணாகரன் கூறியிருப்பதாவது:

கிராம பஞ்சாயத்துகளில் கட்டிடங்கள் கட்டுவது மற்றும் வீட்டு மனைகளுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக, ஏற்கனவே தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளின்படி கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கு அந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அனுமதி வழங்க இயலாது.கிராம பஞ்சாயத்து பகுதிகளில் நகர் மற்றும் ஊரமைப்புத் துறையால் மட்டுமே மனைப்பிரிவு அனுமதி வழங்க இயலும். இவ்வாறு நகர் ஊரமைப்புத் துறையால் அனுமதி வழங்கப்பட்ட மனைப் பிரிவுகளில் மட்டுமே கிராம பஞ். தலைவர்கள் கட்டிட அனுமதி வழங்கலாம்.
 
4 ஆயிரம் சதுர அடிக்கு மேல் குடியிருப்பு வீடுகள் மற்றும் 2 ஆயிரம் சதுர அடிக்கு மேல் வணிகம் சார்ந்த கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டும் நகர் மற்றும் ஊரமைப்புத் துறை அனுமதி பெற்ற பின்னர் கிராம பஞ். தலைவர் அனுமதி வழங்க வேண்டும்.முறையான அனுமதி பெறாத எந்தவொரு மனைப் பிரிவும், கட்டிடமும் சட்டப்படி செல்லுபடியாகாது. மனைப் பிரிவு அனுமதி பெறாத இடங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர முடியாது. நெல்லை மாவட்ட மக்கள் அனைவரும் விதிமுறைப்படி அனுமதி பெற்ற வீட்டு மனைகளை மட்டுமே வாங்கி கட்டிடங்கள் கட்ட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் இந்த விதிமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1