.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வேலைவாய்ப்பற்றோருக்கான கருத்தரங்கு மாணவர்களை பங்கேற்க வைத்த அதிகாரிகள்

Unknown | 11:02 PM | 0 comments

பெரம்பலூர்: படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான கருத்தரங்கில் பெரம்பலூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக அளவில் பங்கேற்க செய்தது பெற்றோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
படித்த வேலையில்லாத இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழக அரசு தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் ஆகியவை மூலம் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி இளைஞர்களை தொழிலதிபர்களாக உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.
இதற்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் நிதியும் ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டிய பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொழில் வணிகத்துறை அதிகாரிகள் தொழில் செய்பவர்களுக்கே கடனுதவி மீண்டும் மீண்டும் வழங்கி புதிய தொழில் முனைவோர் உருவாவதை தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட மாவட்ட அளவிலான கருத்தரங்கம் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கருத்தரங்கத்தில் புதிய தொழில் முனைவோரை பங்கேற்க செய்வதற்கான எவ்வித முயற்சியும் சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுத்ததாக தெரியவில்லை.
இக்கருத்தரங்கில் பெரம்பலூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே அதிகளவில் பங்கேற்றிருந்தனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1