.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

அரசு நலத் திட்ட உதவிகளை தவறாமல் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்-பெரம்பலூர் கலெக்டர் பேச்சு!

Unknown | 11:10 PM | 0 comments


பாடாலூர், டிச. 20:
அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளை தகுதியுள்ள அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலத்தூர் தாலுகா, மேலமாத்தூரில் நேற்று நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் பேசிய பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது கேட்டுக்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், மேலமாத்தூரில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், வருவாய் சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். இம்மனுக்களை அலுவலர்கள் உரிய முறையில் பரிசீலித்து தீர்வு மேற்கொண்டனர்.முகாமு க்கு தலைமை வகித்த கலெக் டர் தரேஸ் அஹமது தகுதிவாய்ந்த பயனாளிகள் 173 பேருக்கு ரூ.26.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயல லிதா அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார். அதன்படி மக�களைத் தேடி மாவட்ட நிர்வாகம் என்ற வகையில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுவதன் நோக்கம் பொதுமக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதுதான். எனவே, அரசு அளிக்கும் நலத் திட்ட உதவிகளை தகுதியுள்ள அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1.20 லட்சம் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் 7 பேருக்கு ரூ.7.20 லட்சம் உதவித்தொ கை, விதவை உதவித்தொகை 2 பேருக்கு ரூ.2.40 லட்சம், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4 பேருக்கு ரூ.4.80 லட்சம், இயற்கை மரண உதவித்தொகை 2 பேருக்கு ரூ.25 ஆயிரம், வேளாண் துறையின் மூலம் ரூ.27 ஆயிரம், பிற�படுத்தப்பட்ட நலத்துறையின் மூலம் 2 பேருக்கு ரூ.5 ஆயிரம், 52 பேருக்கு ரூ.10.40 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, 88 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணை, 15 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
முகாமில் சப்&கலெக்டர் மதுசூதனன் ரெட்டி, பிஆர்ஓ கண்ணதாசன், ஒன்றியக் குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட சமூக நல அலுவலர் பேச்சியம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, ஆலத்தூர் வட்டாட்சியர் நாராயணன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக�கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1