.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு!

Unknown | 9:26 PM | 0 comments

பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களுக்காக மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.இது குறித்த மேலும் விவரங்களைhttp://www.annauniv.edu/என்ற அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
vazhikatti jobs owl 18
மண்டல வாரியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி மண்டலத்தில் அமைந்துள்ள இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்காக டிசம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளிலும், கோவை மண்டலத்துக்கு டிசம்பர் 22, 23 தேதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள கொங்குநாடு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்படுகிறது. சென்னை மண்டல கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் 30, 31 தேதிகளில் சென்னை மாங்காடு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துக்குமரன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்திலும் சிடிஎஸ் நிறுவனம் பங்கேற்று மாணவர்களை பணிக்குத் தேர்வு செய்ய உள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம்: இது போல் இன்ஃபோசிஸ் நிறுவனமும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று மாணவர்களைத் தேர்வு செய்ய உள்ளது. இதற்கான முகாம் சென்னை மண்டலத்துக்கு டிசம்பர் 27, 28 தேதிகளில் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் அமைந்துள்ள ஆனந்த் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடத்தப்படுகிறது. கோவை மண்டல மாணவர்களுக்கு கோவை நீலாம்பூரில் அமைந்துள்ள கதிர் பொறியியல் கல்லூரியில் 2014 ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெறும்.
திருநெல்வேலி மண்டல கல்லூரி மாணவர்களுக்கு 2014 ஜனவரி 10, 11 தேதிகளில் திருநெல்வேலி மெலதெடியூரில் அமைந்துள்ள பிஎஸ்என் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது.
மேலும் விவரங்களைhttp://www.annauniv.edu/  என்ற அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1