.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் பெரம்பலூர் கலெக்டர் பேச்சு!

Unknown | 8:04 PM | 0 comments



பெரம்பலூர், டிச.21-

மின்சாரத்தை சிக்கன மாக பயன்படுத்த பொது மக்கள் முன்வரவேண்டும் என்று தேசிய மின்சிக்கன வார விழாவில் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது பேசினார்.

மின் சிக்கனவார விழா

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தேசிய மின்சிக்கன வார விழா துறைமங்கலத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தலைமை தாங்கி பேசிய தாவது:

இன்றைய காலக் கட்டத்தில் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதி கரித்துக் கொண்டே வருகிறது. நாட் டிற்கு நன்மையான செயல் களை செய்வதே ஒரு குடி மகனின் பொறுப்பும் கடமையு மாகும்.

சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

எனவே பொதுமக்கள் சமூக அக்கறை யுடன் மின்சாரத்தை சிக்கன மாக பயன்படுத்த முன் வர வேண்டும்.

வீடுகளில் தேவையில்லாத நேரங்களில் மின் விளக்குகள் எரிவதை தவிர்க்க வேண்டும். பகல் நேரங்களில் இயற்கையாக கிடைக்கும் சூரிய வெளிச் சத்தை முடிந்த வரை பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

பலநேரங்களில் தொட்டி களில் நீர் நிரம்பி வழிந்த பிறகுதான் மோட்டாரை நிறுத்துகிறோம். அப்படி செய் யும் போது நிலத்தடி நீரும் வீணாகிறது, மின்சாரமும் வீணாகிறது. இதுபோன்று நம் அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கற்றுக்கொண் டாலே மின்பற்றாக் குறை பெருமளவு குறைந்து விடும் என்பதை பொதுமக்கள் மன தில் வைத்து செயல்பட வேண்டும்.

மின் மாற்றிகள்

நமது பெரம்பலூர் மாவட் டத்தில் நகரபகுதியில் 110 மின்மாற்றிகளை நிறுவ நட வடிக்கை மேற் கொள்ளப் பட்டு வருகிறது. தங்கள் பகுதிகளில் இந்த மின்மாற்றிகள் அமைக்கப்படும் போது பொது மக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசி னார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

முன்னதாக மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற் படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கு பெற்ற விழிப்புணர்வுஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ¢ச்சியில் மகளிர் நீதி மன்ற மாவட்ட அமர்வு நீதிபதி மகிழேந்தி, திருச்சி மண்டல தலைமைப் பொறி யாளர்குமரேசன், பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற் பார்வைப் பொறியாளர் வளர் மதி உள்ளிட்ட அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1