அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் உள்நாட்டு வேலைவாய்ப்பு சேவை தொடக்கம்!
சென்னை, டிச. 21
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 35 வருடங்களாக வெளிநாட்டில் இந்தியர்களை பணியமர்த்தம் செய்து வரும் நிலையில், உள்நாட்டு வேலைவாய்ப்பு சேவையினை துவக்குவதன் மூலம் இதன் பணியினை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
உள்நாட்டு வேலையளிப்போர் சரியான வேலைநாடுநர்களை, இடைத்தரகர்கள் இன்றி, நேரிடையாக, உரிய தகுதிகளின் அடிப்படையில் பணியமர்த்தம் செய்ய ஏதுவாக, தகுதிவாய்ந்த மனுதாரர்களின் விபரங்களை அளிக்க தயாராக உள்ளது.
எனவே, உள்நாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவைக்கு ஆட்களை எடுக்க விரும்பும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தங்களின் நிறுவனம் தொடர்பாக பணிக்காலியிடம் விவரங்கள் இருப்பின், அவற்றினை omcldomestic@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கோ, அல்லது கிண்டியிலுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கோ, தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விவரங்கள் அறிய 044-22502267/22505886 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இந்நிறுவன மேலாளரை நேரிடையாக வேலைநாட்களில் சந்திக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Category: வேலைவாய்ப்பு

0 comments