.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மண்டல அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு!

Unknown | 8:41 PM | 0 comments

பெரம்பலூர்,
மண்டல அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது பாராட்டு தெரி வித்தார்.
365 மனுக்கள்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி¢ கலெக்டர் தரேஸ் அஹமது, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியும், பல் வேறு நலத்திட்டங்கள் வேண் டியும் 365 மனுக்கள் பெறப் பட்டது.
இக்கூட்டத்தில் பொது மக்க ளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் அளித்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற் கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற் குரிய நடவடிக்கைகளை உட னடியாக மேற்கொண்டு, தகுதி யான அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் விரை வாக சென்றடையுமாறு பணி யாற்றிட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல அளவிலான தடகள போட்டி களில் வெற்றி பெற்ற குரும்ப லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி கே,கீர்த்திகா, ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்த பி. அர்¢ச்சனா, ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த ஆர்.நீலா தேவி ஆகிய மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற வந்தனர்.
மாணவிகளுக்கு பாராட்டு
இவர்களை பார்த்த கலெக்டர் விளையாட்டுத் துறையில் மென்மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், அனைத்து வகையிலும் உங்களுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், , தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) எஸ்.அமலநாதன, முதன்மைகல்வி அலுவலர் மகாலிங்கம் உட்பட அனைத்துதுறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1