வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டு வர புதிய மின்பாதை: ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும்!
சென்னை, டிச.3-
வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டு வர ரூ.1,930 கோடியில் புதிய மின்பாதை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை ஜனவரி மாதம் செயல்பாட்டிற்கு வருவதால் மின்பற்றாக்குறை நீங்க வாய்ப்பு இருக்கிறது.
இதுகுறித்து பவர் கிரிட் கார்ப்பரேஷன் தலைவரும், மேலாண்மை இயக்குநருமான ஆர்.என்.நாயக் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை போக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். ஒடிசா மாநிலம் தாள்சர் - கர்நாடக மாநிலம் கோலார் இடையே 2,500 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு வரும் மின்கடத்தியும், ஒடிசா மாநிலம் ஜெய்பூர்- ஆந்திர மாநிலம் காஜிவாகா இடையே 2 மின்கடத்திகள் உள்ளன. இவற்றின் மூலம் வடமாநிலங்களிலிருந்து தென்மாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் வடமாநிலங்களிலிருந்து தென்மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொண்டு வரும் வகையில் மின்கடத்திகளை அமைத்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலம் ரெய்சூர், மராட்டிய மாநிலம் சோளாபூர் இடையே 765 கிலோ வால்ட் திறன் கொண்ட 2 புதிய மின்கடத்திகளை ரூ.1,930 கோடி மதிப்பில் அமைத்து வருகிறது.
இவை 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. திட்டமிட்ட காலகெடுவை விட 9 மாதத்திற்கு முன்பாக இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறோம். வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தை கொண்டு வருவதற்கு இவை பெரிதும் உதவும். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையும் ஜனவரி மாதத்தில் இருந்து குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் புதிதாக மின்திட்டங்கள் வரவிருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை தேவைக்கு போக மீதி உள்ள மின்சாரத்தை தென் மாநிலங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் இறங்கினோம். ஆனால் எதிர்பார்த்தப்படி நாகப்பட்டினம், தூத்துக்குடியில் புதிய மின் திட்டங்கள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் செயல்படுத்தப்படாததால், வடமாநிலங்களிலிருந்து தென்மாநிலமான தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மரபுசாரா வகை மின்சாரமான காற்றாலைகள் மற்றும் சோலார் மின்சாரத்தை மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்லும் வகையில் ரூ.36 ஆயிரம் கோடியில் தனியாக மின்கடத்தும் பாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.24 ஆயிரம் கோடியில் மாநிலங்களில் மின்பாதைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பவர் கிரீட் கார்ப்பரேஷன் செயல்படுத்த உள்ளதா? என்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
சத்தீஷ்கர் மாநிலம் - தமிழ்நாடு புகளூர் இடையே புதிதாக மின்கடத்தி அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் ரூ.90 ஆயிரம் கோடியில் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தர்மபுரி - நாகப்பட்டினம், தூத்துக்குடி - தர்மபுரி இடையே 800 கிலோ வால்ட் கொள்திறன் கொண்ட 2 மின்கடத்திகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது. இதுதவிர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக பிற நிறுவனங்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.
மின்பாதைகள் பணிகள் தவிர டெலிபோன் தொடர்புகளுக்கான பணிகளையும் செய்து வருகிறோம். அத்துடன் நாட்டில் உள்ள பல்வேறு பெரிய டெலிபோன் நிறுவனங்களுக்கும் சேவை அளித்து வருகிறோம். இதுபோன்ற செயல்பாடுகளால் வர்த்தகம் வளர்ந்து உள்ளது.
தற்போது 78.7 கோடி பங்குகள் விற்பனை நாளை (இன்று) முதல் தொடங்க உள்ளோம். இதனுடைய விலை ரூ.85 முதல் ரூ.90 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் பங்கு தொகை 17 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இதில் 13 சதவீதம் புதிய பங்குகளும், 4 சதவீதம் மத்திய அரசு பங்குகள் ஆகும். பங்கு விற்பனையில் கிடைக்கும் வருவாய், மின்பாதைகள் மற்றும் பொதுநிறுவனப் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Category: மாநில செய்தி

0 comments