.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

குரூப்-2 இரண்டாம் கட்ட எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி!கலெக்டர் அறிக்கை:

Unknown | 8:21 PM | 0 comments

பெரம்பலூர்: "டி.என்.பி.எஸ். ஸி., குரூப் 2 இரண்டாம் கட்ட எழுத்து தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் நடக்கிறது' என, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. டி.என்.பி.எஸ்.ஸி., குரூப்-1, குரூப்-2, குரூப்-1ஏ, வி.ஏ.ஓ., ஆகிய பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளுக்கு நடத்தப்பட்ட பயிற்சியின் மூலம் இதுவரை 95 பேர் குரூப்-2, குரூப்-1ஏ, வி.ஏ,ஓ., ஆகிய பணியிடங்களை பெற்றுள்ளனர்.
டிச., 1ம் தேதி நடந்த குரூப்-2 முதல் நிலைப்போட்டி தேர்வுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் 168 பேர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அதிகமான நபர்கள் டி.என்.பி.எஸ்.ஸி., குரூப்-2 தேர்வில் தேர்வாக வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் நிலைப்போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு என்று இரண்டாம் கட்ட எழுத்து தேர்வுக்கான சிறப்பு இலவச பயிற்சி வரும் 10ம் தேதி முதல் தேர்வு நடக்கும் நாள் வரை ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும். ஆர்வமுடைய அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1