பெரம்பலூர் அருகே மின் கட் டணம் செலுத்தாத A.T.M.மையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது!
பெரம்பலூர், டிச. 8:
மின் கட் டணம் செலுத்தாத ஏடிஎம் மையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் விநா யகர் கோயில் அருகே கடைவீதியில் ஸ்டேட் வங் கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. அதே ஊரைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் செல்வராஜுக்குச் சொந்தமான கட்டிடத்தில், ரூ. 10ஆயிரம் முன் பணம், ரூ.3ஆயிரம் மாத வாடகையில் அந்த மையம் இயங்கி வருகிறது. மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு கடந்த மாதம் மின் கட்டணமாக ரூ.2,375 செலுத்த வேண்டும். இதற்காக மின் வாரிய ஊழியர்கள் கடந்த நவம்பர் 11ம் தேதி கணக்கெடுப்பு நடத்தி, செலுத்தவேண்டிய கட்டணத்தை அட்டையில் குறித்து விட்டுச் சென்றனர். இந்த கட்டணம் நவம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 30ம் தேதி வரை ஏடிஎம் மையத்திற்கான மின் கட்டணம் வந்து சேராத நிலையில், மின்வாரிய உதவி பொறியாளர் மணிவண்ணன், பொதுமக்களுக்கான சேவை மையம் என்பதால் பெரம்பலூரில் உள்ள அந்த மையத்தின் வங்கிக்கு தொடர்பு கொண்டு கட்டணம் ஏன் செலுத்தவில்லை, எப்போது செலுத்துவீர்கள் எனக்கேட்டார். அதற்கு பதிலளித்த வங்கியாளர், அந்த ஏடிஎம் மையத்தை நாங்கள் பராமரிக்கவில்லை. அதற்கான கட்டணத்தை நாங்கள் செலுத்த மாட்டோம். அது தனியார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அந்த நிறுவனம் பற்றி எங்களுக்கு சரியாக தெரியாது எனக்கூறியுள்ளார். பிறகு மேலும் ஒன்றிரண்டு நாள் காத்திருந்த மின் வாரியத்தினர் டிச.4ம் தேதி மின்இணைப்பை துண்டித்தனர். இதனால் கடந்த 4நாட்களாக ஏடிஎம் மையம் இயங்காததோடு, பாதுகாப்பற்று திறந்த நிலையில் உள்ளது. இதனால் தினமும் பணம் எடுக்க வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் பலரும் ஏமாந்து செல்கின்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments