பெரம்பலூரில் வருகிற 10ம் தேதி மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைப்பெருகிறது!
பெரம்பலூர், டிச. 6:
பெரம்பலூரில் வருகிற 10ம் தேதி மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வளர்மதி தலைமையில், இடமாற்றம் செய்யப்பட்டுள்ள, புதிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 10ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட் டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறை களை நேரில் முறையிட்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments