சென்னை நோக்கியா தொழிற்சாலை விரைவில் மூடுவிழா!
சென்னை: சென்னையில் இயங்கி வரும் நோக்கியா உற்பத்தி ஆலை வரிச் சிக்கலில் சிக்கியுள்ளதால் விரைவில் மூடப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
திறன்பேசிகள் சந்தையில் உலாவருவதற்கு முன்பாக செல்லிடப்பேசிகள் என்றாலே நோக்கியா தான் என்கிற நிலைமையில் இருந்த பிரபல நோக்கியா நிறுவனம் இந்திய அரசுக்கு ரூ.2,250 கோடி ரூபாய்கள் வரி செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வரித் தொகை 2,250 கோடியையும் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் ஆலையை மூட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்புக் காட்டியுள்ளது. ஃபின்லாந்து நாட்டில் 3350 கோடி வரி செலுத்தியுள்ள நோக்கியா, இந்தியாவில் வரி செலுத்த மறுப்பது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்தியாவின் வருமானவரித் துறைக்குச் செலுத்த வேண்டிய இத்தொகையை டிசம்பர் 12க்குள் நோக்கியா நிறுவனம் செலுத்தும் நிலையில் இல்லை என்பதால், சென்னையிலுள்ள அதன் உற்பத்தி ஆலை மூடப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
Category: மாநில செய்தி


0 comments