.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் அருகே பாம்பு கடித்து பள்ளி மாணவி சாவு!

Unknown | 10:48 PM | 0 comments

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகேயுள்ள திருவிளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகள் நிவேதா (13). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டினுள் புகுந்த பாம்பு நிவேதாவை கடித்தது. அதல் மயக்கமடைந்த அவரை பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1