10-வது, பிளஸ்-2 விடைத்தாள்களில் புதிய மாற்றம்: இனிமேல் மாணவர்கள் நூல் கொண்டு கட்டவேண்டியதில்லை!
சென்னை, டிச.5-
தமிழ்நாடு முழுவதும் வருடம் தோறும் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. எனவே பள்ளிக்கல்வித்துறை மாணவர்கள் நலன் கருதி தேர்வு எழுதும் விடைத்தாள்களில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
அதாவது வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள விடைத்தாள்களில் பக்கங்களை அதிகரித்துள்ளது.
முன்பு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்களுக்கு 8 பக்கங்கள் கொண்ட மெயின் விடைத்தாள் இருக்கும். கூடுதல் விடைத்தாள் கேட்டு மாணவர்கள் வாங்குவார்கள்.
அது இப்போது 30 பக்கங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பெரும்பாலும் கூடுதல் விடைத்தாள் கேட்டு வாங்கவேண்டியதில்லை.
அதுபோல பிளஸ்-2 மாணவர்களுக்கு முன்பு 16 பக்கங்கள் கொண்ட மெயின் விடைத்தாள் வழங்கப்பட்டது. அது இனிமேல் 38 பக்கங்கள் கொண்டதாக வழங்கப்பட உள்ளது.
இதனால் இனிமேல் மாணவர்கள் நூல் கொண்டு விடைத்தாள்களை கட்டத்தேவையில்லை. மாணவர்கள் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் தேர்வு மையங்களுக்கு கொண்டு வரப்படும் வினாத்தாள்கட்டு பாதுகாப்பு மையங்களில் வைக்கப்படுகிறது. சில இடங்களில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள், தேர்வு மையத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ளன.
எனவே தேர்வு மையத்தின் அருகே உள்ள பாதுகாப்பு மையத்தில் இருந்து வினாத்தாள் கொண்டு செல்ல ஏற்பாடு நடக்கிறது.

Category: மாணவர் பகுதி

0 comments