பெண்களின் பாதுகாப்பிற்காக அவசர உதவி வசதியை மொபைல் போன்களில் கொண்டுவர அரசு திட்டம்!
புதுடெல்லி, டிச. 5-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குரூர கற்பழிப்பு சம்பவம் ஒன்றில் தனது நண்பனுடன் சென்றிருந்த இளம்பெண் இறந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.இதனைத் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் மீதான சட்டங்கள் கடுமைப்படுத்தப்பட்ட போதிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதில் மத்திய அரசு தீவிரமாக யோசித்துவந்தது. இதன்விளைவாக, தற்போது மொபைல் போன்களில் அவசர் உதவி வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தும் திட்டம் தகவல் தொழில்நுட்பத்துறையினரால் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பெண்கள் பாதுகாப்பிற்கான பல வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அப்போது இந்தப் புதிய முயற்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் முதலில் ஜெய்ப்பூர் நகரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவித்தன.
அடிப்படைத் தொலைபேசி வகைகளின் புதிய கருவிகளில் இந்த வசதி பொருத்தப்பட்டிருக்கும். பழைய மொபைல்போன்களிலும் இந்த வசதியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், இத்தகைய வசதி கடந்த ஒரு வருடமாகவே செயல்பட்டு வருவதாகவும் தகவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆபத்துகளை சந்திக்க நேருவோர் உடனடியாக காவல்துறையின் உதவியைப் பெறமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, போக்குவரத்துத்துறை சமர்ப்பித்த ஜிபிஎஸ் அடிப்படையிலான கண்காணிப்புத் திட்டம் ஒன்றையும் நிதி அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களிலும் இத்தகைய அவசர உதவி பொத்தான்கள் அமைக்கப்படும்.இவற்றின் மூலம் பெறப்படும் சமிக்ஞைகள் உள்ளூர் கட்டுப்பாட்டு அறைமூலம் காவல்நிலையத்தை அடைந்து ஆபத்தில் இருப்போர் விரைவில் பாதுகாப்பு பெறும்வண்ணம் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
1,700 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தில் அனைத்துப் போக்குவரத்துத் தடத்திலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டு மத்திய கட்டுப்பாட்டு அறை ஒன்றுடன் இணைக்கப்படும்.ஏதேனும் வாகனங்கள் தங்களின் வழித்தடங்களில் இருந்து மாறும்போது கண்காணித்து அந்த இடத்தை காவல்துறை உடனடியாக அனுகும் வகையில் இந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்று போக்குவரத்துத்துறை தெரிவிக்கின்றது.
இந்தத் திட்டங்கலைச் செயல்படுத்தவும், பராமரிக்கவும் அதிக கவனம் தேவை என்பதால் ஏலமுறையில் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்புப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளது.

Category: மாநில செய்தி

0 comments