.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தொலைபேசி கட்டணத்தை மொபைல், ஐ-பாட் மூலம் செலுத்தலாம்: BSNL அறிவிப்பு!

Unknown | 9:35 PM | 0 comments

தொலைபேசி பில் கட்டணங்களை இனி மொபைல் அல்லது ஐ-பேட் மூலமாகவே செலுத்தலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்திருக்கிறது. 

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

தொலைபேசி பில் கட்டணம் செலுத்த இனி கம்யூட்டர் உதவியை நாட வேண்டியதில்லை. வரிசையில் நின்று கட்டுவதோ தேவையில்லை. ஸ்மார்ட் மொபைல் அல்லது ஐ-பாட் ஆகியவை பயன்பாட்டில் இருந்தாலே போதுமானது. இவற்றின் மூலமாக தங்களது தொலைபேசி கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

முதலில் ‘‘மை பி.எஸ்.என்.எல். ஆப்’ எனும் அப்ளிகேஷன் சாப்ட்வேரை ஸ்மார்ட் மொபைல் கொண்டோ அல்லது ஐ-பாடில் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்துகொள்ள வேண்டும். இதனை ‘‘ஆன்ட்ராய்டு அப் ஸ்டோர்ஸ்’’ அல்லது ‘‘விண்டோஸ் அப் ஸ்டோர்ஸ்’’ எனும் இணைய தளங்களிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்க் மற்றும் பி.எஸ்.என்.எல்.-பிராண்ட் ட்ரஸ்ட் கார்டு மூலமாகவும் தங்களது பில் தொகையை செலுத்தலாம். 

இதில் மொபைல் போன் ரீ-சார்ஜ் செய்யும் வசதி மற்றும் சிறப்பு கட்டண வவுச்சர்களை ஆக்டிவேட் செய்யும் வசதியும் உள்ளன. பணம் செலுத்திய பின்னர் அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் வாடிக்கையாளர்களின் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1