.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் எஸ்.பி., நியமனம்!

Unknown | 10:51 PM | 0 comments

பெரம்பலூர்: சென்னை சிட்டி கன்ட்ரோல் ரூம் டெபுடி கமிஷனராக பணியாற்றி வரும் ஷோனல்சந்திரா பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., மகேஷ், கடந்த அக்., 11ம் தேதி தேனி மாவட்டத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., பணியிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. பெரம்பலூர் மாவட்டத்தை அரியலூர் எஸ்.பி.,யே கூடுதலாக கவனித்து வந்தார். எஸ்.பி., பணியிடம் காலியாக உள்ளதால் போலீஸ் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ளதாகவும், உடனடியாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர் செய்தி வெளியிட்டப்பட்டது.காலைக்கதிர் செய்தி எதிரொலியாக சென்னை சிட்டி கன்ட்ரோல் ரூம் டெபுடி கமிஷனராக பணியாற்றி வரும் ஷோனல்சந்திரா, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1