.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர், டிரைவர் வேலை வாய்ப்பு முகாம் திருவள்ளூரில் நாளை நடக்கிறது !

Unknown | 9:00 PM | 2 comments

திருவள்ளூர்:108 அவசர சேவை ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ பணியாளருக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை (23-11-2013) திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெறுகிறது. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெறும் இப்பணியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கான தகுதிகள்:

மருத்துவ உதவி பணியாளருக்கு 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண், பிஎஸ்சி 3 வருடம் அறிவியல் சார்ந்த பட்டபடிப்புடன், 12ம் வகுப்பில் அறிவியல் பாடம் பயின்றிருத்தல் அவசியம். செவிலியர் பிரிவில் 3 மற்றும் 2 ஆண்டுகள் பயின்றவர்களும் மற்றும் குறைந்தபட்சமாக 1 ஆண்டு பயின்றவர்களும் கலந்து கொள்ளலாம்.

அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர் பணிக்கு 25-35 வயதுக்குட்பட்ட ஆண், உயரம் 162.5 செ.மீ.க்கும் குறையாமல் இருக்க வேண்டும். குறைந்தது 3 வருட அனுபவம். ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகு, கனரக வாகன உரிமத்திற்கான பயிற்சி/பதிவு நகல் இருத்தல் வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாதவர்களும் கலந்து கொள்ளலாம்.

தகுதியுடையவர்கள் தங்களது கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். தேர்வு பெறுபவர்கள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவார்கள். மருத்துவ உதவி பணியாளர் மாத ஊதியம் ரூ.9010, ஊர்தி ஓட்டுனர் பணியாளருக்கு ரூ.8260.நேர்காணல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 044-28888060  என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

2 comments:

  1. Assalamu alaikum. Idhu Today News'a? Or Last Month News'a? Please Check The date Noted On the News.. Tomorrow date is 23.11.13. Not 23.10.13.. Please check all details before Post.

    ReplyDelete
  2. அவசரத்தில் சரியாக கவனிக்க வில்லை.தவறை சுட்டி காட்டியாமைக்கு மிக்க நன்றி .தற்போது திருத்தி விட்டேன்.

    ReplyDelete

ads2

Catwidget2

Catwidget1