வேப்பந்தட்டை வட்டத்தில் காலியாக உள்ள V.A.O பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!
வேப்பந்தட்டை,நவ.22-
வேப்பந்தட்டை தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றாக்குறையால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பணியிடங்களை நிரப்பித்தர வேண்டுமென முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றாக்குறை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் வெங்கலம், பசும்பலூர், வாலி கண்டபுரம் ஆகிய மூன்று பிர்கா பகுதிகள் உள்ளது. இதில் வெங்கலம் பிர்கா பகுதி யில் 14 வருவாய் கிராமங்களும், பசும்பலூர் பிர்கா பகுதியில் 11 வருவாய் கிராமங்களும், வாலிகண்ட புரம் பிர்கா பகுதி யில் 13 வருவாய் கிராமங்களும் உள்ளது.
இதில் வெங்கலம் பிர்கா பகுதியில் உள்ள 14 வருவாய் கிராமத்தில்12 கிராம நிர்வாக அதிகாரிகளும், வாலி கண்ட புரம் பிர்கா பகுதியில் உள்ள 13 வருவாய் கிராமத்தில்9 கிராம நிர்வாக அதிகாரிகளும், பசும்பலூர் பிர்கா பகுதியில் உள்ள 11 வருவாய் கிராமத்தில் 6 கிராம நிர்வாக அதிகாரிகள் மட்டுமே பணிபுரிகிறார்கள்.
கூடுதல் பொறுப்பு
அதாவது வேப்பந்தட்டை ( தெற்கு ), வெங்கலம் (மேற்கு), பிம்பலூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, மேட்டுப் பாளை யம் (வடக்கு), நூத்தப்பூர்(வடக்கு), கை.களத்தூர்(மேற்கு ), பில்லாங்குளம், காரி யானூர், பசும்பலூர் ( வடக்கு) ஆகிய 11 வருவாய் கிராமங்க ளில் தனியாக கிராம நிர்வாக அதிகாரிகள் இல்லாமல் மற்ற கிராமங்களில் பணிபுரியும் அதிகாரி கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.
குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் பட்டா மாற்றம், வருமான சான்று, இருப்பிட சான்று, ஜாதி சான்று, பிறப்பு, இறப்பு சான்று, சிட்டா அடங்கல், உதவித்தொகை, நிவாரணத்தொகை என எந்த தேவையானாலும் அதற்கு கிராம நிர்வாக அதிகாரியின் கையொப்பம் அவசியமாக தேவைப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்கும் போது ஒரு கிராம நிர்வாக அதிகாரி பல ஊர்களில் பொறுப்பு வகித்தால் பயனாளிகள் கிராம நிர்வாக அதிகாரியைத் தேடி அலைய வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் ஒரு அதிகாரி பல ஊர்களில் பொறுப்பு வகிக்கும் போது பயனாளிகள் கேட்கும் சான் றுகளை உடனே வழங்க முடி யாத சூழ்நிலைக்கு அதிகாரிக ளும் தள்ளப் பட்டுள்ளனர்.
தாசில்தார் கருத்து
இது குறித்து வேப்பந்தட்டை தாசில்தார் சிவஞானத்திடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:-
வேப்பந்தட்டை தாலுகா வில் 11¢ கிராம நிர்வாக அதிகாரி பணியிடம் காலியாக இருக் கிறது. இதற்கு காரணம் பலர் பணிஓய்வு பெற்று விட்டனர். சிலர் அரசுத்தேர்வு எழுதி மற்ற துறைகளுக்கு சென்று விட்டனர். இது தொடர்பாக மேல் அதிகாரி களுக்கு தகவல் அனுப்பி யுள்ளோம். கிராம நிர்வாக அதிகாரி பணியிடம் எப்போது நிரப்பப்படும் என்ற விபரம் தெரியவில்லை என கூறினார்.
முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள்
கிராம நிர்வாக அதிகாரியின் சேவை பொது மக்களுக்கு அன்றாடம் தேவை. எனவே வேப்பந் தட்டை தாலுகாவில் உள்ள 38 கிராம நிர்வாக அதிகாரி பணியிடத்தில் 11 பணியிடம் காலியாக இருப் பது பொது மக்களுக்கும், பய னாளிகளுக்கும் மிகுந்த சிர மத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பணி யிடத்தை உடனே நிரப்பி உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பொது மக்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments