.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஃபேஸ்புக்கின் புதிய வசதியில் குளறுபடி. பயனாளிகள் அதிருப்தி!

Unknown | 7:58 PM | 0 comments

ஃபேஸ்புக் தற்போது ஒரு புதிய வசதியை அதன் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக்கில் நமது நட்பில் இருப்பவர்கள் ஆன்லைனில் இருந்தால் வலது புறம் உள்ள சாட்டிங் லிஸ்ட்டில் அவர்களது பெயர் தெரியும். தற்போது அதில் WEB அல்லது MOBILE என்று அவர்களது பெயருடன் சேர்த்து தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது நமது நண்பர்கள் ஃபேஸ்புக்கை மொபைலில் இருந்து பார்க்கின்றார்களா? அல்லது லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்பில் இருந்து பார்க்கின்றார்களா? என்பதை அது குறிக்கும்.

இந்த புதிய வசதியால் பல பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மொபைல் போனில் பார்த்துக்கொண்டிருந்தாலும், ஒரு சில பிரெளசர்களை பயன்படுத்தி ஃபேஸ்புக்கை மொபைலில் இருந்து  பார்த்தாலும், அது WEB என்று காண்பிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலே உள்ள படத்தில் நண்பர் பாலாஜி என்பவர் மொபைலில் இருந்துதான் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருவதாக கூறினார். ஆனால் அவர் ஒபரா பிரவுசரில் இருந்து பார்ப்பதால் அது web என்று காண்பிப்பதாக தெரிகிறது. இதுபோன்ற சிறுசிறு குறைகளை ஃபேஸ்புக் நிறுவனம் சரிசெய்ய வேண்டும் என ஃபேஸ்புக் பயனாளிகள் இடையே கருத்து நிலவி வருகிறது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1