.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெங்களூருவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ATM மையத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர்!

Unknown | 7:58 PM | 0 comments

பெங்களூருவில் ஏ.டி.எம் மையம் ஒன்றில் நுழைந்து பெண் ஒருவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் பெண் ஒருவர் ஏ.டி.எம் மையத்தில் பணத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு திடிரென்று நுழைந்த இளைஞர் ஒருவர் ஷட்டரை மூடினார். 

பின் அந்த இளைஞர் அரிவாளை காட்டி பணத்தை தருமாறு மிரட்டி பெண்ணை தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இரத்த காயத்தில் மயங்கி விழுந்தார். இந்த பரபரப்பான காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணை தாக்கி கொள்ளையடித்த அந்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

அந்த ஏடிஎம் மையத்தில் பாதுகாப்பிற்கு காவலாளி நியமிக்காததே இந்த சம்பவத்திற்கு என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்து பெண்ணை அரிவாளால் தாக்கி நடைபெற்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.  

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1