தமிழ் நாட்டில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க 22 லட்சம் பேர் விண்ணப்பம்!-தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!
சென்னை, நவ. 1:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 22 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இதற்கான சிறப்பு முகாம் அக்டோபர் 1 முதல் நேற்று மாலை வரை மாநிலம் முழுவதும் 60,418 வாக்குசாவடி மையங்களில் நடந்தது.
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6ம் தேதி .வெளியிடப்படுகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட் டை ஜனவரி 25ம் தேதி வழங்கப்படும்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: பட்டியலில் பெயர் சேர்க்க 22 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
ஒன்றரை லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 13 ஆயிரம் பேர் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.ஆன்லைனில் 10 மடங்கு உயர்வு
18 வயது முடிவடைந்து வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தாலுகா அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். அவர்களின் மனு ஜனவரி 6ம் தேதிக்கு பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
Category:


0 comments