.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிவிண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு!

Unknown | 9:14 PM | 0 comments

பெரம்பலூர்: "ஒரு மாத கால இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கு வரும் 25ம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்' என தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.பெரம்பலூர் மாவட்டம் தொழில் ரீதியாக பின் தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற மாநில மற்றும் மத்திய அரசுகளால் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயலபடுத்தப்பட்டு வருகின்றன.
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
இத்திட்டத்தில் தொழில் முனைவோர்கள் தகுந்த தொழிகளை தேர்ந்தெடுத்தல், நிதி உதவி பெறுதல், மனித வள மேலாண்மை, சந்தையிடுதல், நுகர்வோருடன் பழகுதல், போன்ற பல்வேறு பகுதிகளை கொண்டதாக இருக்கும்.இப்பயிற்சி முகாம் நவ., 6ம் தேதி முதல் டிச., 5ம் தேதி வரை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் உள்ள எம்.ஏ.எம்., இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கிறது. விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா 94431-33385 என்ற மொபைல் நம்பரிலோ edcell@mamce.org
என்ற இமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் 25ம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். தகுதியுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1