.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

கூடங்குளத்தில் மின்உற்பத்தி ஆரம்பம்!

Unknown | 9:08 PM | 0 comments

 கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
22 - koodankulam
மத்திய அரசு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைத்துள்ளது.இந்த அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக அந்த ஏரியா மக்கள் நடத்திய போராட்டத்தால் மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின் ஒரு வழியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கியதை அடுத்து மின் உற்பத்திக்கான பணிகள் ஜரூராக நடைபெற்று வந்தன.இதற்கிடையில் அங்கு இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1