.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வ.களத்தூரின் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவரிடம் அனுப்பிய மமக!

Unknown | 9:56 PM | 0 comments

பெரம்பலூர் மாவட்டத்திற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு வர உள்ளதால், மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த தனிநபர், சங்க நிர்வாகிகள் அல்லது நிறுவன உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாத பொதுப் பிரச்சனைகள் ஆகியவற்றை தமிழ்நாடு சட்டப்பேரவைக் குழுத் தலைவருக்கு அக் 18 க்குள் மனுக்களாக அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமது வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 இதனையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் வ.களத்தூர் கிளை சார்பாக இன்று (17-10-2013) விரைவு தபால் மூலமாக வ.களத்தூர் மக்களின் கோரிக்கைகள் மனுக்கள் அனுப்பப்பட்டது.
கோரிக்கை மனுக்கள் விவரம் வருமாறு:
1.வ.களத்தூரில் பொதுக்கழிப்பிடத்துடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டி மனிதநேய மக்கள் கட்சியின் கிளைச் செயற்குழு உறுப்பினர் மு.சபியுல்லாஹ் அனுப்பிய மனு.
2. வ.களத்தூரிலிருந்து மாவட்ட தலைநகருக்கு சென்று வர கூடுதல் பேருந்து இயக்க வேண்டி மனிதநேய மக்கள் கட்சி கிளைச் செயற்குழு உறுப்பினர் மௌலவி.அ.சாதிக் பாசா ஹஜ்ரத் வழங்கிய மனு.
3.வ.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும்  சேவை செய்ய மருத்துவர்களை நியமித்து, அதன் தரத்தையும் உயர்த்துமாறு மனிதநேய மக்கள் கட்சி வ.களத்தூர் கிளைத் தலைவர் மு.ஜமீல் பாசா அனுப்பிய கோரிக்கை மனு.
4. வ.களத்தூரில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி மனிதநேய மக்கள் கட்சி கிளைச் செயளாளர் அ.முஹம்மது ரஃபீக் அனுப்பிய கோரிக்கை மனு.
இந்த மனுக்கள் அனைத்தும் சட்டப்பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்டு ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1