தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவருக்கு வ.களத்தூர் தமுமுகவால் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு வர உள்ளதால், மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த தனிநபர், சங்க நிர்வாகிகள் அல்லது நிறுவன உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாத பொதுப் பிரச்சனைகள் ஆகியவற்றை தமிழ்நாடு சட்டப்பேரவைக் குழுத் தலைவருக்கு அக் 18 க்குள் மனுக்களாக அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமது வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வ.களத்தூர் கிளை சார்பாக இன்று (17-10-2013) விரைவு தபால் மூலமாக வ.களத்தூர் மக்களின் கோரிக்கைகள் மனுக்கள் அனுப்பப்பட்டது.
கோரிக்கை மனுக்கள் விவரம் வருமாறு:
1.வ.களத்தூர் ஊராட்சியில் கடந்த ஜனவரி 21 அன்று திருமண ஊர்வலம் செல்வது தொடர்பாக நடந்த இருதரப்பு மோதல்களில் தொடர்புடையவர்கள் என்று சம்பந்தமே இல்லாமல் தொழுகைக்காக சென்ற பெரியவர்களின் மீதும், பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மீதும் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டி,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வேப்பந்தட்டை ஒன்றியப் பொருளாளர் அ.சாதிக் பாசா அனுப்பிய மனு.
2.வ.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வண்ணாரம்பூண்டியில் இருக்கும் புளியமரம் பேருந்துநிறுத்ததில் குடிகாரர் களின் மது அருந்தும் நிலையமாக இருக்கும் பயணியர் நிழற்குடையை அகற்றக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளர் அ.முஹம்மது யூனுஸ் அனுப்பிய மனு.
இந்த மனுக்கள் மீது துறைரீதியாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Category: வி.களத்தூர்


.png)
.png)
0 comments