.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் அருகே ஒரு மாதம் ஆகியும் பிடிபடாத சிறுத்தை- பீதியில் பொதுமக்கள்!

Unknown | 9:22 PM | 0 comments


பெரம்பலூர், அக்.9-

பெரம்பலூர் அருகே ஒரு மாதம் ஆகியும் சிறுத்தை பிடிபடாததால் பொதுமக்கள் பீதிய டைந்து உள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

பெரம்பலூர் அருகே கவுல் பாளையம் மேற்குமலையில் குகையில் பதுங்கி வாழ்ந்துவந்த ஆண்சிறுத்தை 30-க்கு மேற் பட்ட ஆடுகளை கொன்று தின்று அட்டகாசம் செய் தது.

அநத சிறுத்தையை வனத் துறையினர் கடந்த 9.9.13 அன்று கூண்டு வைத்து பிடித் தனர். பின்பு சிறுத்தை சத்திய மங்கலம் வனக்காட்டில் விடப் பட்டது.

பொதுமக்கள் நேரில் பார்த்தனர்

இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் அருகே மேலும் ஒரு பெண்சிறுத்தை மற்றும் அதன் 2 குட்டிகள் கவுல் பாளையம், துறைமங்கலம், எளம்பலூர் சாலையில் உப்பு ஓடை மற்றும் வடக்குமாதவி சாலையில் ஒடசக்குளம் பகுதி யில் வீடுகளுக்கு அருகாமையில் இரவு நேரத்தில் இறையை தேடிவந்து கொண்டி ருக்கிறது. இதனை பொது மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் வடக்கு மாதவி சாலையில் டாஸ்மாக் கிட்டங்கி அருகிலும், கோனே ரிப்பாளையத்திலும் கலெக்டர் தரேஸ்அகமது உத்தரவின் பேரில் 2 கூண்டுகள் வைக்கப் பட்டாலும் சிறுத்தை இது வரை பிடிபடவில்லை.

மீண்டும் வருகிறது

இடையே சில நாட்கள் யார் கண்ணிலும் தென்படாத சிறுத்தை கடந்த ஓரிரு தினங் களாக மீண்டும் பெரம்ப லூர் நகரின் எளம்பலூர் சாலை உப்பு ஓடை,, ஒடசக்குளம் குடியிருப்பு பகுதிகளுக்கு ஆடு, நாய் போன்ற இறைகளை தேடி வந்து செல்கிறது.

நள்ளிரவு நேரங்களில் சிறுத்தை வீடுகளின் காம்ப வுண்டு அருகில் நின்றுள்ளதை சிலர் பா£த்துள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

நீர்வழிப்பாதை வழியாக

இதற்கிடையில் பெண் சிறுத்தை தனது குட்டிகளை மலைப்பகுதியில் ஏதோ ஒரு குகையில் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்க செய்துவிட்¢டு இரவு நேரத்தில் கவுல்பாளையத்தில் இருந்து நீர்வழிப்பாதையான ஓடை களை தேர்ந்தெடுத்து இறை களை தேடிவந்து மீண்டும் ஓடைகள் வழியே குகைக்கு சென்று தனது குட்டிகளுடன் தங்கிவிடுகிறது.

கவுல்பாளையத்தில் வயல் தோட்டத்தில் கட்டியிருந்த ஒரு நாயை சிறுத்தை கொன்று தின்றுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கோபுரங்கள்

பெரம்பலூரில் உலவிவரும் சிறுத்தையை உயிருடன் பிடித்தால் மட்டுமே இப்பகுதி மக்களின் அச்சம் போகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.வனத்துறையினர், பொள்ளாச் சியில் உள்ள புலிகள் சரணால யம் அல்லது சத்தியமங்கலம் வனவிலங்கு கள் சரணாலயத் தில் இருந்து பயிற்சி பெற்ற வனக் காவலர்களை வரவ ழைத்து கண்காணிப்பு கோபு ரங்களை, சிறுத்தை அடிக்கடி நடமாடும் இடங்களில் வைத்து தொடர்ந்து ஒருவாரம் கண் காணித்தால் சிறுத்தையை எளிதில் பிடித்துவிடமுடியும் என்று பொதுமக்கள் தெரிவித் தனர்.

அலட்சியம்

ஆனால் பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்கும் செயலாக்கத்தின்மீது அலட் சியம் காட்டிவருவதால் பெரம் பலூர் நகர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெரம்பலூர்பகுதியில் நட மாடி வரும் சிறுத்தை இறைக்கு பதிலாக , கண்ணில் தென்படும் மனிதர்கள் மீது பாய்ந்து உயிர்பலி நிகழாத வண்ணம் தடுத்திட வனத் துறையினர் சிறுத்தையை பிடிக்கும் களப் பணியை தீவிரப்படுத்தினால் மட்டும் பெரம்பலூர் பகுதி மக்களும், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளும் நிம்மதியாக இருக்கமுடியும். வனத்துறையினர் நடவடிக் கையை தீவிரப் படுத்த மாவட்ட நிர்வாகம் முடுக்கி விடவேண்டும் என்று பொது மக்கள் எதிர் பார்¢க்கின்றனர்.



Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1