சென்னை விமானநிலையம் தனியாருக்கு ஏலம்: போராட்டம் வலுக்கிறது!
சென்னை: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய ஆணைய பணியாளர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை தனியாருக்கு வழங்கியதில் மட்டும், மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து அறுபத்து மூன்றாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மேலும், டெல்லி விமான நிலையத்தை ஏலத்தில் எடுத்த நிறுவனம், விமான நிலையத்திற்கு சொந்தமான மூன்றாயிரம் ஏக்கர் நிலத்தில் பல்வேறு நட்சத்திர விடுதிகளை கட்டியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தையும் தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய ஆணைய பணியாளர் சங்கத்தினர் இன்று காலையில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விமான நிலைய நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்த மத்திய அரசு, 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் அதனை புதுப்பித்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
Category: மாநில செய்தி

0 comments