.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வரும் மக்களவை தேர்தலில் வாக்காளருக்கு ஒப்புகை சீட்டு!!

Unknown | 9:23 PM | 0 comments

புதுடெல்லி : தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளருக்கு ஓட்டு பதிவு இயந்திரத்தின் மூலம் ஒப்புகை சீட்டு அளிக்கும் முறையை படிப்படியாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும்போது அதில் மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தவிர்க்க வாக்காளர்கள் தாங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒப்புகை சீட்டு அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மூலம் தேர்தல் வழக்குகள் வந்தால் வாக்குகளை சரிபார்க்க முடியும் என்றும் மனுவில் கூறப்பட்டது.

பிப்ரவரி மாதம் நாகாலாந்து சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலின்போது 21 வாக்கு பதிவு மையங்களில் வாக்காளர் ஒப்புகை சீட்டு அளிக்கும் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாகவும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த ரூ.1500 கோடி செலவாகும் என்றும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே பதில் அளித்தது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்காளருக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை தேர்தல் ஆணையம் படிப்படியாக செயல்படுத்த வேண்டும். 

அடுத்த மக்களவை தேர்தலில் இம்முறையை செயல்படுத்த வேண்டும். திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.
இத்திட்டத்தின் மூலம் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் வாக்காள ருக்கு தாங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் வகையில் அச்சிடப்பட்ட ஒப்புகை சீட்டு கிடைக்கும்.

எக்ஸ்ட்ரா தகவல்

மக்களவை தேர்தலில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வாக்காளருக்கு ஒப்புகை சீட்டு தரும் வகையில் வடிவமைக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டது. இதற்காக நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த 13 லட்சம் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் தேவைப்படும். 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1