இந்திய தூதரகம் முன்பு இளைஞர் தற்கொலை முயற்சி!
மனாமா: பஹ்ரைன் தலைநகர் மனாமா இந்திய தூதரகம் முன்பு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹ்ரைன் இந்திய தூதரகத்திற்குள் நுழைந்த பாலாஜி பாஸ்கரன் என்ற 21 வயது இளைஞர், திடீரென கத்தியால் தனது கை மணிக்கட்டில் உள்ள நரம்பை அறுத்துக்கொள்ள முயன்றார்.
அப்போது, அங்கிருந்தவர்கள் பாய்ந்து சென்று அவரை வளைத்துப் பிடித்து அசம்பாவிதம் ஏதும் நேராதபடி தடுத்தனர். இருப்பினும், கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால் உடனடியாக அவரை சல்மானியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிருக்கு உயிராக காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறியதில் விரக்தி அடைந்ததால் பாலாஜி பாஸ்கரன் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பும் அவர் பல முறை அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: வளைகுட செய்தி


0 comments