.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

"பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும்"-கலெக்டர் உத்தரவு!

Unknown | 10:23 PM | 0 comments



பெரம்பலூர், அக். 29:
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தாமதமின்றி தீர்வு காண வேண்டும் என்றும், அம்மனுக்களுக்கான பலன்கள் அவர்களுக்கு உடனடியாக கிடைக்கும்படி செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பெரம்பலூர் கலெக்டர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 435 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தரேஸ் அகமது பேசியாதாவது:
பொதுமக்கள் அளித்திடும் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் விரைவாக சென்றடையும் வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் அமலநாதன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1