.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஹஜ்ரத்’’ என்று அழைக்கலாமா?

Unknown | 9:41 PM | 0 comments

islam“ஹஜ்ரத்’’ என்று அழைக்கலாமா?
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு மாணவியிடம் குர்ஆன்ஷரீஃப் ஓதியிருக்கின்றீர்களா? என்று கேட்டேன்!“ஓதியிருக்கிறேன்“ என்று கூறினார்!“யாரிடம் குர்ஆன் ஷரீஃப் ஓதினீர்கள்?“ என்று கேட்டேன்!
“ஹஜ்ரத்திடம் ஓதினேன்“ என்றார்!
“ஓர் ஆலிமை ஹஜ்ரத் என்பதாகக் கூறலாமா?“ என்றுதிரும்பக் கேட்டேன்!அம்மாணவி, அப்படித்தானே கூப்பிட வேண்டும்? ஏன்ஹஜ்ரத் எனக் கூறுவது தவறா? என்பதாக அம்மாணவி கேட்டார்!ஆம்! ஹள்ரத் என்பதாகவே அறபு மொழி உச்ரிப்புப்படிக் கூறவேண்டும்!
ஹஜ்ரத் என்னும் அறபு வார்த்தைக்கு கல் என்றுபொருள்! அதுபோல் சிலர், ஹஸ்ரத் என்பதாகவும் கூறுவர்!அவ்வாறு கூறுவது தவறு! ஹஸ்ரத் என்றால் கைசேதம்-கவலைஎன்று பொருள்! அதுபோல் இன்னுஞ்சிலர், உணர்ச்சி வயப்பட் நல்ல உச்சரிப்போடு கூறுவதாக நினைத்து அஷரத் என்பதாகவும்கூறுவர்! அவ்வாறு கூறுவதும் தவறு! ஏனெனில் அஷரத் என்றால்(எண்) பத்து என்று பொருள்! எனவே, ஆலிமை ஹள்ரத்என்பதாகவே அழைக்க வேண்டும். ஏனெனில் ஹள்ரத் என்றால்சமுகம் என்று பொருள்… எனக் கூறினேன்!
உடனே அம்மாணவி, ஹஜ்ரத் என்னும் வார்த்தைக்குள் இவ்வளவு விவகாரங்கள் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை! இன்ஷா அல்லாஹ் இனிமேல் ஹள்ரத் என்றேஅழைப்பேன் என்று கூறியதோடு – இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேயர்கள் யாவரும் இனிமேல் ஆலிமை ஹள்ரத்என்றே அழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்!
-கிப்லா மாத இதழ அக்டோபர் 2013
நன்றி மணிச்சுடா்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1